Thursday, December 6, 2012

நகைக்க...

 ஆசிரியர் : எது முக்கியமானது ? சூரியன  ? நிலாவா ?

மாணவன்   : நிலா தான் முக்கியம்.

ஆசிரியர் : எப்பிடி ?

மாணவன் : பகலில் வெயில் இருக்கும் போது , தேவையே இல்லாமல் சூரியன் வருகிறது . ஆனால் இரவில் வெளிச்சம் இல்லாத போது நிலா ஒளி கொடுக்கிறது .

ஆசிரியர் : !!!@@##
 

Wednesday, October 3, 2012

படித்ததில் பிடித்தது

மழை .....

நீ

அசைத்த கிளை

பெய்த

மழை போல்

இல்லை

ஒரு மழையும்....



நினைவு ....


கடற்கரையில்

நீ உதறிய

மணலுக்கு நன்றி

சொல்வேன் ..

இரவு முழுவதும் உன்

நினைவுகள்

தூங்கவிடாமல்

கண்  உறுத்தல் ..


விக்கல் ...

உன்

பார்வை  தண்ணீருக்குத்தான்

என்

ஞாபக விக்கல்கள் ..



 

Friday, September 21, 2012

mudhal pathivu

வணக்கம் நண்பர்களே

எனக்கு நீண்ட நாட்களாக இணையத்தில் தமிழில் எழுத வேண்டும் என்று ஆசை .

இன்றுதான் அது நிறைவேறி உள்ளது . வெற்றிகரமாக எனது முதல் பதிவை சமர்ப்பித்து விட்டேன் .

எனக்கு எழுத்தார்வம் கொடுத்த சாளரம் (karkybava) மற்றும் பரிசல்காரன் (Krishnakumar) அவர்களுக்கு எனது நன்றிகள்....!!!

தொடர்ந்து எழுத மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்.

நன்றிகளுடன்,
விஜய்